எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 9 மீனவர்களை இரண்டு படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் யாழ் மாவட்ட நீரியல்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்து நீதிபதி ஜே.கஜநிதிபாலன் மீனவர்கள் 9 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மூன்று குற்றச்சாட்டுக்கள் நீரியல்வளத்துறை அதிகாரிகளால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஆறு மாதம்- 18 மாத சாதாரண சிறைத்தண்டனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார் ஊற்காவற்றுறை நீதிபதி.
குறித்த ஒன்பது மீனவர்களையும் மெரிகானா முகாமுக்கு அனுப்பி தாயத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீனவரகளின் இரண்டு படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் 18ம் திகதிக்கு தவணையிட்டுள்ளார், அன்றைய நாளில் படகின் உரிமையாளர்கள் மன்றில் ஆதாரங்களுடன் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.