சிறு குற்றங்கள் தொடர்பான சந்தேக நபர்களுக்கு சிறைத் தண்டனை விதிப்பதற்கு பதிலாக பெற்றோர் அல்லது பாதுகாவலகளின் கீழ் சில மாதங்கள் வீட்டுக்காவலில் வைப்பதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்த நீதி அமைச்சசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுபோன்ற சந்தேக நபர்கள் சிறைச்சாலைக்குள் பல்வேறு நபர்களுடன் பழகுவதன் மூலம் கொடூர குற்றவாளிகளாக சமூகத்துக்குள் பிரவேசிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
இது தொடர்பான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் சந்தேக நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்காமல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் கீழ் வீட்டுக்காவலில் வைப்பதற்கு பணிப்புரை விடுக்க நீதவான்களுக்கு அதிகாரம் கிடைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.