கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் படுகாயம் !

SUB EDITOR
1 Min Read

நேற்றையதினம் (செப். 6) மாலை புகையிரத விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் ராணி புகையிரத்தில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சிகணேசபுரம் பகுதியில் புகையிரத கடவையை கடக்கமுற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார்தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் கிளிநொச்சி உமையாள்புரத்தைச் சேர்ந்த 58 வயதானசுப்பையா சாந்தகுமார் என்பரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டபொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகயாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article
Exit mobile version