ஈழத்தமிழர்களை மையப்படுத்திய தமிழ்த்தேசிய அரசியல் நீரோட்டத்தில்இனத்தின் இருப்புக்காகவும், இறைமைக்காகவும் அரசியற்பணியாற்றுவதற்காகவே நான் இணைந்துகொண்டேன். எனது அரசியற்பயணத்தையும், அதுசார்ந்த பணிகளையும் அதே தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில்நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால், இறுதிவரை அந்தக்கொள்கையில் பிறழ்வற்றுப் பயணிக்கத் தலைப்பட்டுள்ளேன்.
அந்த அடிப்படையிலேயே, காலத்தின் தேவையுணர்ந்து தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும் நான் உறுதியாக உள்ளேன் எனநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் நடைபெற்றமக்கள் சந்திப்பில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.