காரைநகர் கடற்பகுதியில் 125 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் (செப்ரெம்பர் 27) இரவு காரைநகர் கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் சோதனையிட முயன்ற போது, படகில் இருந்த நபர்கள் தப்பி ஓடியுள்ளனர் இதன் போது கடற்படையினர் ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர்.
பின்னர் படகை சோதனையிட்ட போது அதிலிருந்து மூன்று உரப்பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 125 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் செய்த சந்தேக நபரையும் மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.