நெடுந்தீவு பிரதேச சபைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று நெடுந்தீவு மாவிலி துறைமுகப் பகுதியில் எந்தவித பராமரிப்பும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கின்றது.
ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் இக் கட்டடத்தினை உணவகம் ஒன்றுக்கு வழங்கி உணவகம் நடந்து வந்த நிலையில் தற்போது அவர்களும் அதனை கைவிட்டு உள்ளனர் இந்த நிலையில் இக்கட்டிடப் பகுதி சுகாதாரச் சீர்கேட்டின் மையமாகவுள்ளது.
கதவுகள் திறந்து விடப்பட்டு உள்ள காரணத்தினால் கால்நடைகள் தரித்து நிற்பதற்கும் மற்றும் சிந்தனையற்ற சிலரால் சமூக விரோத செயற்பாடுகள் மற்றும் குப்பை தொட்டியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் நெடுந்தீவுக்கு வந்து செல்கின்ற துறைமுகப் பகுதியில் இவ்வாறான ஒரு பராமரிப்பற்ற கட்டிடத்தினை பிரதேச சபை கைவிட்டு உள்ளமையானது மிகவும் கவலை அளிப்பதாக பொதுமக்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இக்கட்டத்தினை பிரதேச சபையினர் தற்காலிகமாக வேணும் பூட்டி அதனை சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.