கடற்படையால் மாவிலித்துறைமுகத்தில் நிறுவப்பட்ட பதாகை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
வெடியரசன்கோட்டையானது பெளத்த விகாரையின் எச்சங்கள் என குறித்த பதாகையூடாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.
இந்த நிலையில் பிரதேச மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் கடுமையான விமர்சனத்தை அடுத்து குறித்த பதாகையை கடற்படையினர் அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர்.
வரலாற்றை திரிவுபடுத்தும் வகையில் தற்போது கச்சதீவில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள புத்தபெருமானின் சிலைகளையும் அரசமரங்களையும் இவ்வாறே சுமூகமான முறையில் கடற்படையினர் அகற்றவேண்டுமென பிரதேசமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.