கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் துரிதமாக அங்கு இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த பணிகள் தொடர்பான கண்காணிப்பு விஜயத்தினை பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் நேற்று (19ஏப்ரவரி) மாலை மேற்கொண்டார்.
திருவிழாவின்போது முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் தொடர்பிலான கலந்துரையாடலும் இவ்விஜயத்தின்போது அங்கு இடம்பெற்றது.
கலந்துரையாடலில் கடற்படையின் வடபிராந்திய உதவி கட்டளை தளபதி, நெடுந்தீவு கடற்படை கட்டளை தளபதி மற்றும் கடற்படை உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
திருவிழாவுக்காக செல்லும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் , இறங்குதுறை அமைப்பு மற்றும் ஆலய வளாக அலங்கரிப்பு போன்ற சகல பணிகளிலும் இரவு பகலாக கடற்படையினரே மேற்கொண்டு வரும்நிலையில் அவர்கள் ஆற்றிவருகின்ற பணிகளுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களை பங்குத்தந்தை இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.