ஓய்வூதிய விண்ணப்பத்தை சரியான முறையில் அனுப்புவது தொடர்பாக அரச நிறுவனங்களின் விடய அலுவலர்களுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட நிகழ் நிலை பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி இந்த நிகழ்நிலை பயிற்சித் திட்டம் நடைபெறவுள்ளது. அன்று காலை 9 மணி முதல் 12 மணிவரை பரவலாக்கப்பட்ட ஓய்வூதியக் கிளைக்கு விண்ணப்பத்தை சரியாக அனுப்புதல் என்ற விடயப் பரப்பில் நிகழ்நிலை பயிற்சிகள் வழங்கப்படும்.
பிற்பகல் ஒரு மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கிளைக்கு விண்ணப்பத்தை சரியாக அனுப்புதல் என்ற விடயப்பரப்பில் நிகழ்சிலை பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த விசேட நிகழ்நிலை பயிற்சித திட்டம் தமிழ் மொழி மூலம் நடத்தப்படும். பின்வரும் மைக்ரோசொப்ட் தீம்ஸ் (Microsoft Teams) செயலி ஊடாக பயிற்சி திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Microsoft Teams meeting
Join on your computer, mobile app or room device
Click here to join the meeting
Meeting ID: 443 658 163 765
Passcode: nCnemU