ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 9 பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டினால் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரச பை தெரிவிக்கின்றது.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய குடிநீர் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், முற்கரண்டி மற்றும் கத்திகள் உட்பட 9 பிளாஸ்டிக் பொருட்களுக்கே அக்டோபர் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவற்றின் உற்பத்தி, உள்ளூர் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்தல், விற்பனை, இலவச சலுகை அல்லது காட்சிப்படுத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளின்படி சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.