உலகளவில் இன்று வரை புரட்சிக்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்பவர் சேகுவேரா..
அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அறிவோம்…
➤ 1928-ம் ஆண்டு, அர்ஜெண்டினாவின் ரோஸாரியோ பகுதியில் பிறந்தார் சேகுவேரா.
➤ 1945 முதல் 51-ம் ஆண்டு வரை புகழ்பெற்ற BUENOES AIRES பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார் சேகுவேரா.
➤ 1951-ம் ஆண்டில், தென்அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, ஏழ்மைநிலை மற்றும் மோசமான பணி சூழல் சேகுவேராவை வெகுவாக பாதித்தது. மனம் தளராத சேகுவேரா 1952-ல்- பெருநாட்டில் தங்கி தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.
➤ 1954-ம் ஆண்டு, தென்அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளின் ஏழ்மை நிலைக்கு முதலாளித்துவ அரசாங்கங்களே காரணம் என முடிவுக்கு வந்தார் சேகுவேரா.
➤ இந்த நிலையில், கம்யூனிஸத்தின் தந்தை என போற்றப்படும் கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
➤ 1958-ம் ஆண்டு, சேகுவேரா, காஸ்ட்ரோ சகோதரர்கள், கியூபாவில் நடந்த வந்த சர்வாதிகார ஆட்சியை கவிழ்த்தனர்.
➤ கியூபாவை ஆட்சி செய்து வந்த சர்வாதிகார அரசை கவிழ்க்க போராடி வந்த புரட்சி படையில் சேகுவேரா இணைந்து செயல்பட்டார்.
➤ 1959-ல் அர்ஜெண்டினாவில் பிறந்த சேகுவேரா, கியூபாவின் குடியுரிமை பெற்றார்.
➤ 1960-ல் கியூபாவில் நடந்த புரட்சி மார்க்ஸிஸ்ட் புரட்சி என முழக்கமிட்டார் சேகுவேரா.
➤ 1963-64-ல் ஐநா.சபையில் சோஷியலிச புரட்சி பற்றி உணர்ச்சிகரமாக உரையாற்றினார் சேகுவேரா.
➤ 1965-ல் கியூபா அரசில் தான் வகித்து வந்த பதவிகளை ராஜினாமா செய்தார்.
➤ புரட்சி தேவைப்படும் நாடுகளில் அதை கொண்டு வருவதே தனது இலக்கு என கூறி கியூபாவை விட்டு வெளியேறினார் சேகுவேரா.
➤ புரட்சி நடவடிக்கைக்காக சேகுவேராவை கைது செய்ய ஆப்பிரிக்காவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை முறியடித்து 1966-ல் ஆப்பிரிக்காவிலிருந்து தப்பித்து கியூபா வந்தார் சேகுவேரா.
➤ 1967ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பொலிவிய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் சேகுவேரா.
➤ 1967-ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி 9 முறை சுடப்பட்டு சேகுவேரா கொல்லப்பட்டார்.
சேகுவேராவை பற்றிய THE MOTORCYCLE DIARIES என்ற திரைப்படம், கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது..