2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம் மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பரீட்சை முடிவுகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையகம், நாட்டின் பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பாக சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
அதன்படி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நேற்று அது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்