நாடளாவிய ரீதியில் இன்று பிற்பல் ஒரு மணியளவில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக இலங்கை மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ள காரணத்தினால் நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எனினும் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பிய பின்னர் 3 தொடக்கம் 5 மணித்தியாலங்களின் பின்னரே நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தென் மாகாணத்தின் சில பிரதேசங்கள் மற்றும் கொத்மலையின் சில பிரதேசங்களில் மின்சார துண்டிப்பு வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.