அழைப்பு கிடைக்காமல் தவறவிடப்பட்ட நெடுந்தீவுக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை மாணவி மாகாணமட்ட தமிழ்தினப் போட்டியில் பங்குபற்றியுள்ளார்.
நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய மாணவி அமலஜான் அமல ஜெனிஸா – பிரிவு 01 இற்கான பேச்சுப்போட்டியில் தீவக வலயமட்டத்தில் 1 ஆம் இடம்பெற்று மாகாணமட்ட போட்டிக்குத் தெரிவாகியிருந்தார்.
தாமதமாக கிடைத்த அழைப்பினைத் தொடர்ந்து கடற்படையினரின் படகு ஒன்று பொருட்கள் ஏற்றுவதற்காக பகல் 11.00 மணியளவில் புறப்பட்ட படகில் மாணவியை அவரது பெற்றோர், ஆசிரியர்கள் அழைத்து சென்று யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பெரும் பயண சிரமத்தின் மத்தியில் பகல் 1.30 மணியளவில் பங்குபற்ற செய்துள்ளனர். இதன்போது மாணவி போட்டியில் தெரிவாகவில்லை என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இம்மாணவி வரும் வரைக்கும் இப்பிரிவுக்கான போட்டி இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வலயத்தில் முதலாம் இடத்தை பெற்ற மாணவி மாகாணமட்ட போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட போதும் மாகாண மட்ட போட்டி இன்று யாழ்நகரில் இடம்பெறும் எனும் அறிவித்தல் கிடைக்காத காரணத்தினால் போட்டியில் கலந்த கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் பெரும் கவலை தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.