நெடுந்தீவை பூர்வீகமாகவும் கட்டுடை நவாலியை வதிவிடமாகவும் தற்பொழுது ஜேர்மனியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளருமான ஓய்வு நிலை மருத்துவத்தாதி திருமதி ஜெயபாக்கியம் நடேசன் அவர்கள் எழுதி வெளியிட்ட அறிவுக்களஞ்சியம் எனும் நூல் அறிமுக விழா நேற்று(நவம்பர் 2) யாழ்.கைதடி நாவற்குழி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம அதிதியாக அருட் கலாநிதி ஜெயசேகரம் அடிகளாரும், சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் எட்வேட் அருந்தவசீலன் மற்றும் யாழ் குரும்பசிட்டியைச் சேர்ந்த கவிஞர் சர்வேஸ்வரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நூலினை வடக்கு மாகாணசபையின் யாழ் மாவட்ட முன்னாள் உறுப்பினரான கலாநிதி ந.விந்தன் கனகரட்ணம் அவர்கள் ஆய்வு செய்து அறிமுகப்படுத்தி வழங்கிவைத்தார்.
நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்ததுடன், திருமதி ஜெயபாக்கியம் நடேசன் அவர்களினால் இருநூறு மாணவர்களுக்கு மதிய போசனமும் கற்றல் உபகரணங்களும் அறிவுக்களஞ்சியம் பொது அறிவுப் புத்தகங்களும் பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.