ஜனவரி 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், பெற்றோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது வற் வரி விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் அடுத்தாண்டுக்கான பட்ஜெட்டில் வற் வரியை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது 15 வீதமாக இருக்கும் வற் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.
இந்த வரி உயர்வால் பெற்றோல், டீசல் விலை மேலும் 10 வீதம் அதிகரிக்கப்படலாம் என அரச நிதிக்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் அரச வருமானத்தை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் இந்த வரிகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.