நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திகுழு கூட்டமானது இன்றையதினம் ( 10/04) காலை நெடுந்தீவு பிரதேசசெயலக மண்டபத்தில்கடற் தொழில் நீரியல்வளத்துறை அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அமைச்சர்டக்கஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டதுன் படகுசேவை நேரமாற்றம் தொடர்பிலும் ஆராயப்பட்டு அதன் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7.00 மணிக்கும் மதியம் 2.30 மணிக்கும் குமுதினி படகும் மாலை 4.00 மணிக்கு வடதாரகை படகும் நெடுந்தீவில் இருந்தும் பயணிப்பதுடன் ,
காலை 7.30 மணிக்கு வடதாரகையும் , காலை 9.30 மணிக்கும் , மாலை 4.00 மணிக்கு குமுதினி படகும் குறிகாட்டுவானில் இருந்தும் புறப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வீதி விளக்குகள் பொருத்துதல் தொடர்பாகவும் , உள்ளக மதுபான விற்பனை நிலையம் திறத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு பரீட்சார்த்தமாக 3மாதங்கள் மதுபான விற்பனை நிலைய இயங்குநிலையின் சாதக பாதக நிலைகளை கருத்தில் கொண்டு அதனை தொடர்ந்து இயங்க வைப்பதா எனும் முடிவுக்கு வரும் வகையில் தீர்மானமும் எடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் திணைக்கள தலைவர்கள் , உள்ளூர் அமைப்புகளின் பிதிநிதிகள் என பலர் கலந்து கொண்டதுடன்
மேற்படி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நெடுந்தீவு பிரதேசசெயலகம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.