அனலைதீவு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் கோவில் திருவிழா அனலைதீவு மக்களின் ஒற்றுமையான ஒத்துழைப்புடனும், ஆலய நிர்வாகத்தினரின் நல்முயற்சியாலும், சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு (July. 14) புதன் கிழமை ஆரம்பமாகிறது
அனலைதீவு ஐயனார் ஆலய உயர்திருவிழாவை இவ்வாண்டு நடத்துவதற்கு ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அனுமதி வழங்கியுள்ளது.
கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள்:
ஒரு நேரத்தில் 50 பேருக்கு மேற்படாத வகையில் பக்தர்கள் கலந்துகொள்ள முடியும்.
சமுக இடைவெளி பேணப்படுதல் வேண்டும்.
சரியான முறையில் முகக்கவசம் அணிதல் கட்டாயமானது.
சுகாதார நடைமுறைகளைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த தொண்டர் குழுவொன்றை ஆலய நிர்வாகம் அமைத்து செயற்படுத்த வேண்டும்.
அனலைதீவு தவிர்ந்த வெளியிடங்களில் இருந்து வருவோருக்கு ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி(MOH) பணிமனையில் அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படுவர். (அறிவிக்கப்படும் நாளில் மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.)
வெளியிடங்களில் இருந்து வருவோர் ஒரு முறை மட்டுமே, பரிசோதனையின் பின் அனுமதிக்கப்படுவர். எனினும் விழாக்காலம் முடியும் வரை அனலைதீவில் தங்கியிருக்க முடியும்.
தகவல்:
ஊர்காவற்றுறை சுகாதார அதிகாரி
கிராம சேவகர் – அனலைதீவு