கொரோனா தொற்று அதிகமாகின்றது சில பாடசாலை அதிபர்கள் வகுப்பறை கற்றலுக்கு மாணவர்களை வலிந்து இழுக்கின்றனர் உடற்கல்வி டிப்ளோமா ஆசிய சங்கத்தின் தலைவர் ப தர்மகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கமைய கல்வி அமைச்சு தொழில்நுட்ப வசதிகள் இல்லாத மாணவர்களுக்கான கல்விவள நிலையங்களை அமைத்து தொலைக்காட்சி மூலம் சமூக இடைவெளியைப்பேணி கற்றலை அவதானித்து கல்வியை பெற்றுக்கொள்ளும் முறையை உருவாக்கி ஆசிரியர்களை மேற்பார்வை செய்து மாணவர்கள் தொற்றுக்கு உள்ளாகதபடி பாதுகாக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில அதிபர்கள் இதனை சாக்காக வைத்து மாணவர்களை பாடசாலைக்கு வரும்படியும் ஆசிரியர்களை கட்டாயம் வகுப்பு எடுக்குமாறும் வற்புறுத்துகின்றனர். தென்மராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இன்று தரம் 6 வகுப்பிற்கும் பாடசாலைகள் நடைபெறுவதாக அறிய முடிகிறது.இங்கு 6ம் 7ம் வகுப்புக்களை நடாத்துவது அர்த்தமற்றது. அதுமட்டுமல்லாது யா
ழ், மற்றும் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் இவ்வாறு வகுப்புகளில் வகுப்பு எடுத்த ஆசிரியர்களை வலயத்தில் இருந்து மேற்பார்வைக்கு சென்ற உதவிக்கல்வி பணிப்பாளர்கள் கண்டித்து சென்றதாகவும் அறிய முடிகிறது. ஆனால் அதிபர் நீங்கள் சும்மா இருந்து சம்பளம் எடுக்கிறீர்கள் கற்றலை செய்யுங்கோ என வற்புறுத்து வதாகவும் ஆசிரியர்கள் வேதனைப்படுகின்றனர்.
அத்துடன் வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஸ்மாட் தொலைபேசி இல்லாத காரணத்தால் இணையவழி கற்பித்தல் செய்ய முடியவில்லை. இதனை பாடசாலை மாணவர்களுக்கு முன்னால் வைத்து அதிபர் ஒருவர் விசாரணையும் நடாத்தியுள்ளார். ஏழைமாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்ற நல்லநோக்கத்துடன் அரசு எடுத்த முயற்சியை சில அதிபர்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனர். அதிலும் தொற்றுதல் அதிகம் உள்ள இடங்களில் இதனை அனுமதிக்க முடியாது.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே இந்த விடயத்தில் மாகாண கல்வித்தினணக்களம் கண்டிப்பானதும் கட்டாயமானதுமான உத்தரவை பிறப்பித்து சமூக அக்கறை இல்லாது தான்தோன்றித்தனமாக செயல்படும் அதிபகளை சுற்றறிக்கைக்கு இயங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.