மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா மிகச் சிறப்பாக இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.
இன்று(ஜூலை 2) காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் அருட்திரு அன்ரன் ரஞ்சித் ஆண்டகை இணைந்து கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள், அருட் சகோதரர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளடங்கலாக சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதேவேளை 1924 ஆம் ஆண்டு மருதமடு திருப்பதியிலே பல ஆயர்கள் சூழ மருதமடு அன்னைக்கு முடிசூட்டு விழா இடம்பெற்ற முடிசூட்டு விழாவின் நூற்றாண்டு நிறைவு யூபிலி பெருவிழாவாக அடுத்த ஆண்டு ஜூலை மாதம் கொண்டாடப்படவுள்ளது. நேற்றுத் திருவிழாவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் யூபிலி நூற்றாண்டு விழவை பிரகடனம் செய்து வைத்தார்.