காரைநகர் கடற்பரப்பில் கடலில் மிதந்த நிலையில் 42 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக் கஞ்சாப் பொதிகள் அடங்கிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
காரைநகர் கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைபோது இந்தப் பொதிகள் கைப்பற்றப்பட்டன.
3 பொதிகளில் மிதந்து வந்த 128 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சாவை மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தல்காரர்கள் இந்தப் பொதிகளைக் கரைக்குக் கொண்டுவர முடியாது கடற்பரப்பில் விட்டுச் செல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட பொதிகள் சட்டநடவடிக்கைக்கு ஒப்படைக்கும் வரை கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது என கடற்படையினர் தெரிவித்துள்ளது.