ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புதுடெல்லிக்கு நேற்றையதினம் (டிசம்பர்15) சென்றுள்ளார்.
புதுடில்லியை சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை அமைச்சர்முருகன் வரவேற்றிருந்தார்.
அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும்முதலாவது அரசு முறை விஜயம் இதுவாகும்.
இதன்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடஉள்ளத்துடன், இந்திய இலங்கை வர்த்தக சமூகத்துடனும் பேச்சுக்களில்ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்புகள் இரு தரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தவும், மக்களைமையமாகக் கொண்ட கூட்டாண்மைக்கு வேகம் சேர்க்கவும் ஒரு வாய்ப்பாகஅமையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது