கிண்ணியாவில் மறைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு !

SUB EDITOR
1 Min Read

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவில் உள்ள கண்டல்காடு – சாவாறு பகுதியில் நேற்று (டிசம்பர் 4) வெள்ள நீரின் அடியோட்டத்தால் உருவான குழியிலிருந்து பெருமளவிலான வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கால்நடை வளர்ப்போர் அந்தப் பகுதிக்குச் சென்றபோது சந்தேகத்துக்கிடமான பொருட்களை கண்டு பொலிஸாருக்கு தகவல் தரப்பட்டதின் பேரில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட வெடி பொருட்கள்:

MILS 36 வகை கைக்குண்டுகள் – 109

T56 வகை துப்பாக்கி ரவைகள் – 1,678

சம்பவ இடத்துக்குச் சென்ற கிண்ணியா பொலிஸார், திருகோணமலை விசேட அதிரடிப்படையினரை அழைத்து, மீட்கப்பட்ட அனைத்து கைக்குண்டுகளும் அங்கிருந்தபடியே தகர்த்து அழிக்கப்பட்டது .

இதேவேளை வெள்ளத்தின் பலத்த நீரோட்டத்தால் ஏற்பட்ட பெரிய குழியில் இருந்து இந்த ஆயுதங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கண்டல்காடு – சாவாறு பிரதேசம் முன்போர் காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த காலத்தில் புதைக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம் என எங்களுக்குச் சந்தேகம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நீண்ட காலமாக புதைக்கப்பட்டிருந்த இந்த வெடி பொருட்களை மேலே கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் கணித்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸ் இதனுடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

Share this Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version