இந்தியாவின் திருச்சி விமான நிலைய புதிய புதிய முனையமானது 60,723 சதுர மீற்றர் பரப்பளவில் இந்திய ரூபா 1,112 கோடியில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஸ்ரீரங்கம் ஆலயத்தின்ராஜகோபுரத்தினை பறைசாற்றுவகையில் நுழைவாயில்அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்துசமயம் , தமிழர் கலாச்சாரம், இந்து கடவுள்களின்படங்கள், நடராஜர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டு இந்த விமான நிலையம்அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முனையமானது கடந்த ஜனவரி 2 ஆம் திகதி இந்திய பிரதமர்நரேந்திர மோடியினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில்தொழில்நுட்ப ஒழுங்குபடுத்தல் பணிகள் முடிவடைந்து நேற்றுமுன்தினம் முதல்மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் ஊடாக முதல் விமானம் ஸ்ரீலங்கன்ஏா்லைன்ஸ் விமானம் கொழும்பு நோக்கி அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டதுடன் காலை 6.50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் முதலாவதுவிமானமாக திருச்சியில் தரையிறங்கியது. இதன்போது இண்டிகோவிமானத்திற்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது.