வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது !

SUB EDITOR
1 Min Read

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன் தலைமையிலான பொலிசார்நேற்று (மே 28) மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினைமேற்கொண்டனர்.

இதன்போது இளைஞர் ஒருவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகள்மீட்கப்பட்டன. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வியாபார நோக்கில் குறித்தபோதை மாத்திரைகளை வவுனியா, குருமன்காடு பகுதிக்கு கொண்டுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரைநீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்

Share this Article
Exit mobile version