முல்லைத்தீவு மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்றைய தினம்(மார்ச் 29) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மு.ப 11.00 மணிக்கு மாவட்ட செயலர் திரு.க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு செயற்படுத்தப்பட்ட விவசாய நடவடிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு 2023 ஆண்டுக்கான அனைத்து விவசாயத் திட்டங்கள் மற்றும் செயற்படுத்தல் எனப் பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
சிறுபோகம் மற்றும் பெரும்போகம், ஏனைய உபஉணவுப் பயிர்ச்செய்கை, வீடுத்தோட்டம், விலங்கு வளர்ப்பு முதலிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 2023 ஆம் ஆண்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.