முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் பிரிவுபசார நிகழ்வு நேற்று (நவம்பர் 22) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 2019.12.16 அன்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையில் பொறுப்பேற்று கடந்த 22 ஆம் திகதி அன்றைய தினம் வரை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தனது உன்னதமான சேவையை வழங்கியிருந்தார்.
உலகை உலுக்கிய பேரிடரான கொரோனா அதன் பின்னர் நிதி நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி என பல சவால்களுக்கு மத்தியிலும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தனது நிர்வாக திறமையினால் சிறப்பான சேவையை வழங்கினார்.
யாராக இருப்பினும் பாரபட்சம் பாராது பணியாற்றும் ஒப்பற்ற சேவையாளரான மேலதிக மாவட்ட செயலாளருக்கும் அவரது பாரியாருக்கும் மிகவும் சிறப்பான முறையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அனைத்து உத்தியோகத்தினராலும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் மாவட்ட செயலக சிரேஷ்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், அனைத்து நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.