முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனிப்பு போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது.
இன்று 6வது நாளாக தொடர்ந்து வந்த நிலையில் குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் குறித்த போராட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இதேவேளை, இலங்கை கடற்படையால் மேலும் 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனலைதீவு கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.