முல்லைத்தீவில் 2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 527 மாணவர்களுக்கு அண்மையில் 5 லட்சத்து 27 ஆயிரம் ரூபா பெறுமதியான “பாரி சுயகற்றல்” ஏடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் முல்லைத்தீவு வலையக்கல்விப் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டது.