முல்லைத்தீவு, கொக்குக்தொடுவாயில் மனித உடல் எச்சங்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை சிதிலங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதியில் மேலதிக அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நீர்வழங்கல் அதிகார சபை மேற்கொண்ட பணிகளின்போது, மனித உடல் எச்சங்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடைச் சிதிலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
அதையடுத்து இது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த இடம் அவர்களால் பாரமெடுக்கப்பட்டு, நீதிமன்றத்துக்கும் அறிக்கையிடப்பட்டது.
அந்த இடத்தில் மேலதிக அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 6ஆம் நீதிவான் முன்னிலையில் அங்கு அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.