கொவிட் 19 பரவல் காரணமாக கடந்த மாதத்திலிருந்து முழுமையாக முடக்கப்பட்டிருந்த புங்குடுதீவு J / 26 கிராமசேவகர் பிரிவிலும் மற்றும் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்திலும் வாழ்கின்ற 75 குடும்பங்களுக்கும் , தனியார் பேருந்து போக்குவரத்து சங்க ஊழியர்களுக்கும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் ரூபாய் ஒரு லட்சம் பெறுமதியான உலருணவு பொதிகள் , சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன .
இச்செயற்பாட்டிற்காக புங்குடுதீவு கிழக்கு CF கடலுணவு நிறுவன உரிமையாளர் திரு .சிவபாதம் பரரூபன் ( குகன் ) 25000 ரூபாய் , கண்ணகை அம்மன் கோயில் நிர்வாக தலைவர் திரு .செல்லையா யுகேந்திரன் ரூபாய் 25000 , வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு .கருணாகரன் நாவலன் 25000 ரூபாய் , சுவிஸ் சிவ சந்திரபாலன் ரூபாய் 25000 என்றவாறு நிதியுதவிகளை வழங்கியிருந்தனர் . மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் உடனடியாக இவ்நிதியுதவியை வழங்கிய மேற்படி சமூக தொண்டர்களுக்கு சூழகம் அமைப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது .
கிராம சேவகர்களான சந்திரசேகரம் சிறீதரன் , வடிவேல் கோகுலதாஸ் மற்றும் சூழகம் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களான கருணாகரன் குணாளன் , தரங்கன் ,ஜீவா , ரதீஷ் , ராகுலன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்