மின்சார சேவை வழமைக்குத் திரும்பியது
கடந்த நாட்களில் ஏற்பட்ட புரவி சூறாவளியின் பாதிப்பினால் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் தடைப்பட்ட நிலைமை காணப்பட்டது. மின்சார சபை இயந்திரக் கட்டிடத்துக்குள் நீர்; உட்புகுந்தமையால் மின்சாரம் தடைசெய்யப்பட்டது. அத்துடன் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் சில பாதிப்புக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இரண்டு நாட்கள் நெடுந்தீவு மக்கள் இருளில் மூழ்கி இருந்த நிலமையாலும் மின்சாரம் இல்லாமையால் மக்கள் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு பல தடைகளுக்கு மத்தியிலும் மினசார சபை இன்று மாலையில் இருந்து தனது சேவையினை வழங்கி வருகின்றது
தற்போதும் மினசாரசபை வளாகத்துள் தண்ணீர் காணப்படுவதுடன் வெளியேற்றுவதற்கான வழிவகைகளும் காணப்படவில்லை தற்போதும் இடி மின்னல் என்பவற்றுடன் மழைக்கான அறிகுறிகள் காணப்படுவதால் தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் அல்லது இயந்திரக் கோளாறுகள் ஏற்படின் மீளவும் சேவை துண்டிக்கப்படலாம்
கடந்த காலங்களிலும் மின்சார சபை நெடுந்தீவில் தனது பணியினை திறம்பட மேற்கொள்வதுடன் தடைகள் வருகின்றபோதும் உடனடியாக அதனை சீர்; செய்து மக்களுக்கு வழங்குவது என்பது குறிப்பிடத்தக்கது.