மத, இன, மொழிகளுக்கு இடையிலான வன்மங்கள் நீங்கி நற்செயல்கள் பெருகட்டும்

Anarkali  - Senior Editor
1 Min Read

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டில் மத, இன, மொழிகளுக்கு இடையிலான வன்மங்கள் நீங்கி நற்செயல்கள் பெருகட்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் நெடுந்தீவு நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் எடிசன் தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் உள்ளதாவது-

“சோப கிருது தன்னில்
தொல்லுலகெல்லாம் செழிக்கும்
கோபம் அகன்று குணம் பெருகும்
மாரி அழியாமல் பெய்யும் – எல்லாம்
உண்டாகும் என்றே உரை”

என்ற இவ்வாண்டின் வெண்பாவுக்கு ஏற்றாற்போல் இப் பூவுலகில் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, நோய், வன்முறை அகற்று மனிதம் பெருகவும்,

நாடு மத, இன, மொழிகளுக்கு இடையிலான வன்மங்கள் நீங்கி நற்செயல்கள் பெருகவும்,

பிறந்து இருக்கும் புத்தாண்டில் நாம் அனைவரும் ஒரு தாய் பெற்ற மக்களாய் வாழ்ந்து இன்புற்று இருக்கவும்,

எனது இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றுள்ளது.

TAGGED:
Share this Article
Exit mobile version