இன்று (ஆகஸ்ட் 05) நடைபெறும் பாரளுமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் தாங்களாக சென்று தங்களது வாக்குகளை அளித்து வருகின்றனர்.
நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயம், நெடுந்தீவு மகாவித்தியாலயம் நெடுந்தீவு சுப்ரணமணிய வித்தியாலம் ஆகிய மூன்று வாக்களிப்பு நிலையங்களிலும் காலை 07.00 மணி முதல் வாக்களர்கள் சென்று தமது வாக்கினை செலுத்தி வருகின்றார்கள்.
நெடுந்தீவு மக்கள் பல வெளியிடங்களில் வாழ்ந்து வந்தாலும் தங்கள் வாக்குரிமையினைக் கருத்திற் கொண்டு 500 மேற்பட்ட மக்கள் நெடுந்தீவிற்கு வருகை தந்து தங்களது வாக்களிப்பனை மேற்கொண்டதனைக் காண முடிந்தது.
வாக்களிக்க வந்த மக்களது போக்குவரத்திற்கு சரியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், கடற்போக்குவரத்து சீரின்மையாலும் கடும் காற்று காரணமாகவும் வருகை தந்த மக்கள் பல அசௌகரியங்களை அடைந்து கொண்டதாகவும் மக்கள் கருத்து தெரிவித்தனர்.