நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் நெடுந்தீவு மேற்கு சைவப் பிரகாச வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவாி 24) வழங்கி வைக்கப்பட்டது.
புதிதாக இயந்திரத்தினைப் பெற்றுக் கொள்ளவும் அதனை பராமாிக்கவும் மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் ஊடாக திருமதி நந்தினி சிங்கராஜா அவா்கள் அனுசரைணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு மேற்குப் பிரதேசத்தில் போட்டோ கொப்பி இயந்திரத்தின் தேவை மிக முக்கிய தேவையாக காணப்பட்டதுடன் பல நாட்களாக இத் தேவை தொடா்பாக பல இடங்களிலும் விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே இப்பாடசாலையில் இருந்த நிழல் பிரதி இயந்திரம் பழுதடைந்து பாவனைப்படுத்த முடியாத நிலமையேற்பட்டு நான்கு வருடங்களுக்கு இப் பாடசாலையின் இத் தேவைக்காக 04 கிலோ மீற்றா் தூரம் சென்றே தேவையினை நிறைவேற்றி வந்தனா்.
குறிப்பிட்ட போட்டோ பிரதி இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டு குறிப்பிட்ட விற்பனை பிரதிநிதிகளால் நெடுந்தீவிற்கு கொண்டு செல்லப்ட்டு பாடசாலை அதிபாிடம் கையளிக்கப்பட்டதுடன் நிறுவனத்தின் தொழிநுட்ப அலுவலா் ஊடாக அதன் பாவைனை தொடா்பாகவும் பாடசாலை ஆசிாியா்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.
இது தொடா்பாக தீவக வலயக் கல்விப்பணிப்பாளா் திரு.பொன்னையா இரவிச்சந்திரன் அவா்கள் கருத்து தொிவிக்கும் போது பாடசாலை நீண்ட நாட்களாக இத்தேவையின் முக்கியத்துவம் குறித்து விண்ணப்பம் செய்திருந்த போதும், அதனை நிறைவேற்ற முடியாத நிலமை காணப்பட்டதாகவும் இச் சேவையினை வழங்கியமைக்காக மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினருக்க நன்றி தொிவித்துள்ளாா்.