பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிர்மாய்த்த பெண் தொடர்பில் தகவல்கள் !

SUB EDITOR
1 Min Read

மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறைக்கூடத்தில் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைநடைபெறும் வரை பொலிஸ் நிலைய பிணவறையில் வைக்குமாறு மாளிகாகந்தநீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க இன்று (ஜனவரி22) உத்தரவிட்டுள்ளார்.

32 வயதான குறித்த பெண் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தநிலையில், இன்று (ஜனவரி22) அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் பெண், வவுனிக்குளம்அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக பிறப்பிக்கப்பட்டிருந்தபிடியாணைக்கு அமைய நேற்று (ஜனவரி21) இரவு மருதானை பொலிஸாரால்அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், சிறைச்சாலையின்இரும்புக் கதவில் தனது பாவாடையைக் கட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டுள்ளதாகவும் மருதானை பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கைஅளித்துள்ளது.

இதேவேளை அவர் தொங்கியிருந்த ஆடையை துண்டித்து, உடனடியாககொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருதானைபொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதுடன் , தேசிய மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்தப் பெண் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நீதவான் இன்று (ஜனவரி22) நேரில் சென்றுவிசாரணை நடத்தினார்

Share this Article
Exit mobile version