புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் இன்று(டிசம்பர் 2) பங்கு திரு அவையின் மாணவர்களுக்கான தேவநற்கருணை அருட்சாதனம் வழங்கும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
ஆலய பங்குதந்தை அருட்பணி எட்வின் நரோஸ் அடிகளாரின் வழிப்படுத்தலில் தேவநற்கருணை அருட்சாதனம் வழங்கும் திருப்பலி இடம்பெற்றது.
இத் திருப்பலியினை தீவக மறைகோட்ட முதல்வர் அருட்பணி பேர்ணாட் றெக்னோ அடிகளார் ஒப்புக்கொடுத்து இணைந்து மன்றாடினார். இதன்போது 17 மாணவர்கள் தேவ நற்கருணை அருட்சாதனம் பெற்றுக்கொண்டனர்.