முல்லைத்தீவு மாவட்ட மனித வியாபாரம் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வுக்கான மன்றம் முல்லைத்தீவு மாவட்ட உத்தியோகத்தர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியது.
மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் மனித வியாபாரம் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மனித வியாபாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தல், மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிப்பதற்கான மாவட்ட ரீதியில் உருவாக்கப்பட்ட மன்றத்தினுடாக மனித வியாபாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி ஆதரவினையும், உதவிகள் வழங்குவதற்கான ஒரு வலையமைப்பை உருவாக்குவதும், இலங்கையிலிருந்து தொழில் நிமிர்த்தம் புலம்பெயர்பவர்களை பாதுகாப்பான முறையில் அவர்களை வெளிநாடு அனுப்புவதற்கான நெறிமுறைகளை வழிப்படுத்துவதற்காக மாவட்ட மனித வியாபாரத்துக்கான மன்றம் செயற்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.