நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய வருடாந்த திருவிழாவின் வழிபாட்டு ஒழுங்குகளை நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம் நாளை(ஓகஸ்ட் 30) கொடியேற்றத்துடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகவுள்ளன.
மேலும் எதிர்வரும் 07 ஆம் திகதி நற்கருணை விழாவும் 08 ஆம் திகதி பெருவிழாவும் இடம்பெறவுள்ளன.
வழிபாடுகள் அனைத்தும் மாலை 05:00 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி 05:30 மணிக்கு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
நற்கருணை விழா மாலை 04:45 மணிக்கும் பெருவிழா திருப்பலி காலை 05:45 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளது. பெருவிழாவன்று அன்னையின் திருச்சுரூப பவனியானது மாலை 04:30 மணிக்கு ஆரம்பமாகி றோ.க.மகளீர் கல்லூரி முன் வீதியூடாக பயணித்து புனித தோமையார் ஆலய முன் வீதியூடாக பிரதான வீதியை சென்றடைந்து அவ்வீதியூடாகவே ஆலயத்தை சென்றடையவுள்ளதுடன் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப ஆசீரும் இடம்பெறும்.