நெடுந்தீவுக் கல்விக்கோட்டத்தில் 2022 (2021 ஆம் ஆண்டுக்கானது) ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இன்றைய தினம் (மே 27) வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
அதிபர் நவரட்ணசிங்கம் அறக்கட்டளை நிறுவனம் ஊடாக இயாதவராயர் குலேந்திரன் அவர்கள் அன்பளிப்பு செய்த மடிக்கணணிகளை நெடுந்தீவு பிரதேசசெயலகத்தில் பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த பல்கலைக்கழக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைக்கு தெரிவாகிய மாணவி அ. மேரி நிவேதா நெடுந்தீவு றோ.க.மகளீர் கல்லூரியிலிருந்து யாழ் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களின் கலைத்துறைக்கு தெரிவாகிய மாணவிகளான க. தக்சாயினி மற்றும் ஜோ.றீனா உடுவில் மகளீர் கல்லூரியூடாக யாழ் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைக்கு தெரிவாகிய மாணவி த.ஜதுஷா ஆகியோரே இவ்வாறு கெளரவிக்கப்பட்டனர்.
மேற்படி நிகழ்வில் அதிபர் நவரட்ணசிங்கம் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் இ.மருதநாயகம், செயலாளர் திரு ஜே.ஜீவராஜ் , பொருளாளர் திரு த.தனுஷன் மாற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.