வவுனியா நெடுங்கேணிப் பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் நேற்று(ஜூலை 22) காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் மாலை அழகையா மகேஸ்வரன் என்பவரே இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விவசாயியான அவர், தனது தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்தபோது, பக்கத்து தோட்டத்தில் நின்ற ஒருவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து இந்த கொலை நடந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரும், 39 வயதான சந்தேக நபரும் முன்னாள் போராளி எனக் கூறப்படுகிறது. குறித்த சந்தேக நபர் மீது சுமார் 5 வரையான வழக்குகள் உள்ளன.
கடந்த வாரம் சட்டவிரோதமாக இடியன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். 20ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் அவருக்குதண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினமே தண்டப் பணத்தைச் செலுத்திவிட்டு வந்து, மற்றொரு இடியன் துப்பாக்கியைபெற்று அதன் மூலமே சூடுநடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.