நயினாதீவு செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நயினாதீவு ஸ்ரீ கணேச சனசமூக நிலையம் நடாத்தும் சைவசமய பாட போட்டிப் பரீட்சை எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
காலை 8.30 மணி முதல் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் இந்த சைவசமய பாட போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளது.
பரீட்சைகள் வகுப்பு ரீதியாக நடைபெறவுள்ளதுடன் பரீட்சைக் கட்டணமாக 20 ரூபா அறவிடப்படவுள்ளது.
தரம் 2-4(2023)வரை தமிழ் சமயம் கணிதம்
தரம் 5(2023) புலமைப் பரிசில் மாதிரிப் பரீட்சை
தரம் 6-11(2023) சைவசமய பாடம் மாத்திரம்
தரம் 11(க.பொ.த சா/தரம் 2022) சைவசமய பாடம் தரம் 10 & 11 உள்ளடக்கியது
க.பொ.த உ/தரம் – பொதுஅறிவு
பரீட்சை வினாத்தாள்கள் அனைத்தும் கடந்த வருட(2022) பாடத்திட்டத்தை 100% உள்ளடக்கியதாக அமையும்.