நயினாதீவு – குறிகட்டுவான் படகுசேவையின் நேர அட்டவணை

SUB EDITOR
1 Min Read

நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை கடந்த சனிக்கிழமை (ஜூன் 01)  முதல் புதிய நேர அட்டவணையில் இயங்கி வருகின்றது.

இதற்கமைய நயினாதீவிலிருந்து குறிகட்டுவானுக்கான படகுச்சேவை காலை 6.30 முதல் மாலை 5.30 மணிவரை ஒவ்வொரு 1/2 மணி நேரத்துக்கு ஒரு படகு என்ற ரீதியில் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. 

அதேபோல குறிகட்டுவானிலிருந்து நயினாதீவுக்கான படகுச் சேவை காலை 7 மணி முதல் மாலை  6.30 மணிவரை ஒவ்வொரு 1/2 மணி நேரத்துக்கு ஒரு படகு என சேவை இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை நயினாதீவு நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 06) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.



Share this Article
Exit mobile version