நண்பர்கள் வட்டம் நெடுந்தீவு எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தி தினத்தினை முன்னிட்டு தமது செயற்பாடுகளை வெளிப்படுத்தவும், நன்றி தெரிவிக்கும் முகமாகவும் திணைக்களத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் என்போரை இணைத்து உறவுகள் சங்கமம் எனும் நிகழ்வு தலைவர் திரு.பா.அன்ரன் கிறிஸ்ரியன் அவர்கள் தலமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (June – 21) மிக சிறப்பாக இடம் பெற்றது.
இந் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களும் நெடுந்தீவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.கே.அன்ரன் மரியதாஸ் அவர்கள் அமைப்பின் ஆலோசகர் திரு. எ.எவ்.ஜேக்கப் அவர்கள் நெடுந்தீவு பங்குத்தந்தை அவர்கள், தென்னிந்தியத் திருச்சபை ஊழியர் அவர்கள், பிரதேச சபைத் தலைவர் அவர்கள், பிரதேச செயலக கணக்காளர் அவர்கள்; பாடசாலைகளின் அதிபர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கடந்த ஒரு வருடத்தில் நண்பர்கள் வட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையும் கணக்கு விபரங்களும் ஆண்டறிக்கையாக அச்சிடப்பட்டு ஆலோசகர் திரு.எ.எவ்.ஜேக்கப் அவர்களால் வெளியீடு செய்யப்பட முதற் பிரதி பிரதேச செயலாளர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கொறோனா தாக்கத்தினால் மிக எளிமையான முறையில் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், எமது அமைப்பிற்கான தலைமக்காரியலத்தினை பிரதேச செயலாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுடன், அமைப்பிற்கான பெயர்ப்பலகையினை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.கே.அன்ரன் மரியதாஸ் அவர்கள் திறந்த வைத்தார்.
இது வரை அமைப்பின் வளர்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து நிற்பதுடன் தொடர்ந்து பணியாற்ற அனைவரது ஒத்துழைப்புக்களையும் நண்பர்கள் வட்டம் வேண்டி நிற்கின்றது.