நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் 45வருடமாக சேவையாற்றி வரும் குமுதினிப்படகு பல்வேறு குறைபாடுகளுடன் மக்களின் சேவையில் நாளந்தம் ஈடுபட்டு வருகின்றது.
பல்வேறு அதி நவீன படகுகளை மக்கள் சேவைக்காக வழங்கிய போதும் குமுதினியின் சேவை நெடுந்தீவு மக்களுக்கு மிக முக்கியமாக காணப்படுகின்றது.
மிக அண்மைக்காலமாக குமுதினி பல்வேறு குறைபாடுகுளுடன் 03 நேர சேவைகளை வழங்கி வருகின்றது நீர்; உட்புகுகின்ற தன்மையோடு நாளாந்தம் உள்வரும் தண்ணிகளை மோட்டர் ஊடாக வெளியெற்றிய வண்ணம் போக்குவரத்து தொடர்கின்றது. அத்துடன் மேற்கூடாரப் பகுதிகளும் திருத்தம் செய்ய வேண்டிய நிலமை காணப்படுகின்றது.
நாளந்தம் அதிகமான நேரங்களில் 100இற்கு மேற்பட்ட பயணிகள் பிரயாணம் செய்வதுடன், அவர்களது பாதுகாப்புக்கு ஜக்கட் இல்லாத நிலமைகூட காணப்படுகின்றது.
இது தொடர்பாக குமுதினிப் படகில் பணி புரியும் ஊழியர்களிடம் வினாவிய போது தாம் படகில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அதனை அவர்கள் திருத்தம் செய்து வழங்காது விட்டால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தாமாக படகினை நிறுத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
தற்போது கடற்காற்று குறைவாக காணப்படுவதால் போக்குவரத்து இலகுவாக காணப்படுகின்றது. ஆயினும் கடல் நிலைமை மோசமாக ஏற்படும் சந்தர்ப்பம் ஏற்படுமாயின் போக்குவரத்து நிலமை பாதுகாப்பற்றதாகவே காணப்படுகின்றது.
குமுதினிப்படகு திருத்தம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி சிறந்த முறையில் திருத்தம் செய்து மக்கள் போக்குவரத்திற்கு மீளவும் வழங்க வேண்டும் என்பது மக்கள் கருத்தாக காணப்படுகின்றது.