சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவிலுள்ள பொருளாதாரம் நலிவடைந்த குடும்பங்களிலுள்ள 450 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு ரூபாய் நான்கு இலட்சத்து ஐம்பதினாயிரம் பெறுமதிமிக்க 450 புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன.
கனடா வாழ் புங்குடுதீவின் மைந்தர்களான திரு. பேரின்பநாதன் இளங்கோ , திரு.முத்தையா திருக்கேதீஸ்வரன் , திரு .வி.கே.செளந்தர்ராஜன் ஆகியோரின் நிதியுதவியில் இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது .
இத்திட்டத்தினை அமுலாக்கம் செய்வதற்கு ஒத்துழைப்பு நல்கிய கனடா சோ.சச்சிதானந்தன் ( ஓய்வுபெற்ற கிராம சேவகர் , முன்னாள் தலைவர் – கனடா பழைய மாணவர் சங்கம் ) , ஓய்வுபெற்ற கிராமசேவகர் கணேசமூர்த்தி , பிரபல தொழில் அதிபரும் மனவளக்கலை பேராசிரியருமான அருள்நிதி . சி. முருகானந்தவேல் ஆகியோருக்கும் இத்திட்டத்தினை அமுலாக்கம் செய்வதற்கு ஒத்துழைப்பு நல்கியமை குறிப்பிடத்தக்கது.
சூழகம் அமைப்பு புங்குடுதீவில் மட்டுமன்றி கடந்த காலங்களில் நெடுந்தீவு உட்பட அனைத்து தீவகங்களிலும் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.