கோவிட் தடுப்பூசியான “கோவிஷீல்ட்” சில நேரங்களில் ஒரு சிலருக்குபக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என குறித்த மருந்தை தயாரித்த நிறுவனம்லண்டன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
உலகையே உலுக்கிய கோவிட் தொற்றால் இலட்சக்கணக்கானோர்உயிரிழந்ததுடன் உலக பொருளாதாரமே சீர்குலைந்தது.
கொரோனாவை தடுக்க கோவாக்ஸின் , கோவிஷீல்ட் போன்ற தடுப்பு மருந்துகண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பு மருந்து கட்டாயமாக்கப்பட்டது. 90% மக்கள்இந்த ஊசியை ஏற்றிக் கொண்டனர்.
இந்த ஊசியால் உயிருக்கு அச்சுறுத்தல் வருமா என்ற கேள்வி எழுந்த போது, மருந்தை தயாரித்த நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தன.
இந்நிலையில் கோவிஷீல்ட் காரணமாக பலர் உடல்நலம் பாதிக்கப்படுவதாகலண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதுஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்துடன் இணைந்து “கோவிஷீல்ட்” தயாரித்தஅஷ்ட்ராஜெனேகா நிறுவனம் பாதிப்புகள் ஏற்படுத்தலாம் என்பதைஒப்புக்கொண்டுள்ளது.
‘ஏதேனும் ஒரு சிலருக்கு இது போன்ற பாதிப்பு வருவது அரிதான விடயம் தான். இரத்தத்தில் உறைதல் ஏற்படலாம், டி.டி.எஸ் எனப்படும் (Thrombosis with Thrombocytopenia Syndrome ) பாதிப்பு வரலாம். இது எல்லோருக்கும்வருவதில்லை, மிக அரிதாக நடக்கலாம்’ என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.