கொரோனா தொற்றால் வவுனியாவில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் இன்று (ஜனவரி 11) மணரமடைந்துள்ளார்.

குறித்த பெண் பிரவசத்திற்காக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. ஆயினும் குறித்த குழந்தை சில நாட்களின் பின்னர்  மரணமடைந்துள்ளது.

இதேவேளை குறித்த குழந்தையின் தாய்க்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் சாவ மரணமடைந்துள்ளார்.

Share this Article
Exit mobile version