தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீடு சம்பந்தமான மூன்று நாட்கள் பயிற்சி நெறி வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த 23 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இன்றுடன்(மே 26) நிறைவுற்றது.
இந்தப் பயிற்சி நெறியில் பிரதேச செயலர், உதவிப் பிரதேச செயலர், பிரதிப் பணிப்பாளர் (புள்ளி விபரவியல் திணைக்களம்) புள்ளிவிபர உத்தியோகத்தர், வட்டார உத்தியோகத்தர்கள் மற்றும் மேற்பார்வை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்( அபிவிருத்தி) ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான 15 ஆவது குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கான தொகை மதிப்பு ஆணையாளர் மற்றும் பிரதித்தொகை மதிப்பு ஆணையாளர்களுக்கான தொகை மதிப்பு கட்டங்கள், தொகை மதிப்பின் அமைப்பு ,தொகை மதிப்பீட்டின் கடமைப் பொறுப்புகள், காலவரையறை போன்ற விடயங்கள் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.