காரைநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் இரண்டாம் கட்ட கலந்துரையாடல் நேற்று (செப்ரெம்பர் 30) மதியம் 2:00 மணியளவில் காரைநகர் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள்,சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நடப்பாண்டு திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் இதன் இறுதிக் கலந்துரையாடல் எதிர்வரும் ஒக்ரோபர் 5 ஆம் திகதி அன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.